Thursday, 27 September 2012

விடியலை நோக்கி

விடியும்போது விடியட்டும் என்றில்லாம் !
விடியலை நோக்கி நாம் புறப்படுவோம் !

Wednesday, 5 September 2012

துரோகி

எதிரி நம் கண் முன்னே நிற்பவன் !
துரோகி நம் கூடவே இருப்பவன் !

கடற்கரை

கடற்கரை காதலர்களின் 
வாடகை இல்லா  குடில் 
வியவாரிகளின் தள்ளுவண்டிகள் !

நான்

எந்தவொரு செயலிலும் 
என் மனதுக்கு ஒவ்வாமை 
ஏற்படும்வரை - நான் 
காத்திருக்கிறேன் , செயல்படுத்தியிருக்கிறேன் !
சில நேரங்களில் 
எதற்காக காத்திருந்தேனோ !
அதற்கான பலன் கிடைத்தது !
பல நேரங்களில் 
எதுவுமே நடக்கவில்லை !
நேரங்களைத் தவிர ! 

விளம்பரம்

விளம்பரம் 
மக்களின் பணத்தை 
சுரண்டுவதற்கான 
மூலதனம் ( முதலீடு ) !

ஆளுவது

அரசை தேர்ந்தெடுப்பவர்கள் மக்கள் !
மக்களை ஆளுவது  அரசு !

எழுத்தாளன்

எழுத்தாளன் உண்மையை மட்டுமே பேசும் 
குழந்தையாக இருக்க வேண்டும் !

சே !

உலகில் எங்கெல்லாம் ஒரு சமுகத்தை 
மற்றொரு சமுகம் ஆதிக்கம் செலுத்துகிறதோ !
அங்கெல்லாம் விடுதலை வேண்டி 
விரும்பியவன் சே !

சே !

ஆஸ்துமா தன்னை தாக்கியபோதும் 
ஆதிக்கத்தை வீழ்த்துவதிலேயே  - தன் 
முனைப்பைக் காட்டியவன் சே !

சே !

மக்கள் விரும்பியது விடுதலையை !
விடுதலை விரும்பியது சே  - என்கிற 
மாபெரும் புரட்சியாளனை !

தவிக்கிறான் தமிழன் !

வெள்ளையனே வெளியேறு !
வெள்ளையனே வெளியேறு !
என்று போராடி வெள்ளையனை 
நாட்டை விட்டு வெளியேற்றியவன் !
தன் நாக்கை விட்டு 
வெளியேற்ற முடியாமல்
தவிக்கிறான் தமிழன் ! 

விடுதலை

விடுதலை ஒருபோதும் 
நம் காலடியில் வந்து  
சும்மா விழுந்துவிடுவதில்லை 
நாம்தான் விடுதலையை நோக்கி 
ஓடவேண்டும்!
வென்றால் விடுதலை!
இல்லை
போராட்டம் ..........போராட்டம் ................

உறவாக

ஒரு  மனிதனை எந்தவொரு மனிதன் 
காயப்படுத்துகிறானோ - அவன் 
உறவாக ( மனிதனாக ) இருக்கமுடியாது !

கல்வி

மனிதனுக்கு கல்வியைக் கொடுப்போம் !
கல்வி அவனுக்கு அனைத்தையும் கொடுக்கும் !

இலவசம் !

குடிமகனின் வருமானத்தில் 
குடிமக்களுக்கு இலவசம் !

மதிப்பிற்குரிய அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு வணக்கம்,


மதிப்பிற்குரிய அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு வணக்கம்,


வல்லரசு வல்லரசு என்று சொல்லுகிறார்களே!


அப்படி என்றால் என்ன? 


கொஞ்சம் விளக்குங்கள்!


அணு ஆயுதம் அமெரிக்கா மட்டுந்தான் வைத்திருக்கிறதா?


அறிவு இந்தியர்களிடம் மட்டுந்தான் இருக்கிறதா?


இந்தியர்கள் என்றால் யாரை கூறுகிறீர்கள்?


இந்த கேள்வியை நான் ஏன் கேட்கிறேன் என்றால்?


இந்தியாதான் வல்லரசு என்று திமிரோடு சொல்லுங்கள் என்று 


கூறியதற்காகதான் இந்த கேள்வி. நீங்கள் இந்தியனா? அல்லது தமிழனா?


தமிழனை எந்தவொரு இந்தியனும் இந்தியனாய் பார்க்கவில்லையே!


தமிழனின் 


குரலுக்கு,உணர்வுக்கு,மொழிக்கு,போராட்டத்திற்கு,தியாகத்திற்கு 


(மரணத்திற்கு) இது எதற்குமே (இந்தியா) இந்தியர்கள் மதிப்பளிப்பதே 


கிடையாதே! பிறகு எப்படி தமிழன் இந்தியனாகமுடியும்? 


அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் எல்லோரும் அமெரிக்கர்கள் என்றுதான் 


நினைக்கிறேன்.


ஆனால் இந்திய ஐக்கிய நாடுகளில் தமிழன் இந்தியனாக இல்லை.


இந்தியனாக இல்லை என்பதைவிட ,பிற இந்திய ஐக்கிய நாடுகள் 


தமிழனை இந்தியனாக 


பார்ப்பதுமில்லை,நினைப்பதுமில்லை,ஏற்றுக்கொள்ளவுமில்லை. 


பிறகு எப்படி நான் திமிரோடு இந்தியன் என்று 


சொல்லிக்கொள்ளமுடியும்?


தமிழன் என்று வேண்டுமானல் திமிராகச் சொல்லிக்கொள்கிறேன்,ஏன்?



ஆனவத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.


இது எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.உங்களுக்கு தவறாக 


இருந்தால் என்னை மண்ணிக்கவும்.




நன்றியுடனும்,தமிழ் உணர்வுடனும்

மதுரை தா.தமிழ்நதி



பேச:9444133382,9841819189.